ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 01, 2017, 06:59 PM
புதுடெல்லி,
ஆசியாவில் உள்ள நாடுகளில் ஊழல் குறித்து சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. சுமார் 16 நாடுகளில் இருந்து 20 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை போர்ப்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளதாக அந்த நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பள்ளிகள், மருத்துவமனை, அடையாள அட்டை ஆவணங்கள் பெறுவதற்கும், காவல்துறையில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசு பள்ளிகளில் லஞ்சம் கொடுப்பதாக 58 சதவீதம் பேரும், சுகாதார திட்டத்திற்கு 59 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில் 40 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. லஞ்சம் நிறைந்த நாடுகளில் பாகிஸ்தான் 4-வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment