Wednesday 26 October 2016

விருதுகள் - 2016

விருதுகள் - 2016

1.இந்தியாவில் மனித உரிமைக்காக போராடி வரும் வழக்கறிஞரும் தமிழருமான ஹென்றி திபேன், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (ஜெர்மனி) அமைப்பின் 8-வது மனித உரிமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி. விருது “ஸ்லீப்பிங் ஒன் ஜூபிட் டர்” எனும் நாவலை எழுதிய இந்தியாவின் அனுராதா ராய் வென்றுள்ளார்.

3.நீர்ஜா பானட் விருது பெங்களூருவை  சார்ந்த  சமூக  ஆர்வலரான சுபாஷினி வசந்த் அவர்களுக்கு வழங்கப்ப்பட்டுள்ளது

4. 2015 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது  -பீகார் முதல்வர்  நிதிஷ்குமார்

5. 2015 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருது  - சஞ்சய் சுப்ரமணியம் 

6. 2015 ஆம் ஆண்டிற்கான கோஸ்டா  நாவல் விருது - கேட் அட்கின்சன் 

7. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவிஸ்ரீ  பால  சாகித்ய விருது  - பாலகிருஷ்ணா கார்தே  

8. 2015 ஆம் ஆண்டிற்கான  ஹரிகிருஷ்ணா  தேவ சார  பால  சாகித்ய விருது -பாலகிருஷ்ணாகார்க்

9. புற்றுநோய்  மருத்துவ  சிகிச்சையில் சிறப்பாக செயலாற்றியதற்காக  இங்கிலாந்து ராணியிடம் இருந்து நைட்வுட்  விருதினை இந்திய வம்சாவளியை சார்ந்த ஹரிபால் சிங் பெற்றார்

10. மின் ஆளுமைக்கான தேசிய விருது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வென்றுள்ளது

11. அமெரிக்க அறிவியல் பதக்கம்" = அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி ராகேஷ்  கே.ஜெயின் அறிவியல் பதக்கத்துக்கு தேர்வு

12. இந்திய வம்சாவளியை சார்ந்த ராகுல் தாக்கர் அவர்களுக்கு திரைபடங்களில்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக  "ஆஸ்கர் விருது " வழங்கப்பபட்டது

13. மத்திய அமைச்சர் வெங்காய நாயுடுவிற்கு "ஸ்காச் வாழ்நாள் சாதனையாளர்  விருது(scotch lifetime achievement award) வழங்கப்பட்டது
14.நூர் இனாயத் கான் பரிசு  (noor inayat khan prize) இந்தியாவை சார்ந்த கல்லூரி மாணவியான  "கீதாக்சி அரோரா "விற்கு வழங்கப்பட்டது
  
15. வாழ்நாள் சாதனையாளருக்கான வி.சாந்தாராம் விருது   - நரேஷ் பேடி

16."ஆர்யபட்டா விருது" - விஞ்ஞானி அவினாஷ் சந்தர் பெற்றுள்ளார்(இந்திய அக்னி ஏவுகணை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த இவரை "இந்தியாவின் அக்னி ஏவுகணை மனிதர் என அழைப்பர் )

  17."சர்வதேச ஆசிரியர் விருது 2016" = பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஹனன் அல் ஹரோப் தேர்வு
 
  18."உலக சமஸ்கிருத விருது" = தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரின்தோர்ன் தேர்வு
 
  19.கோல்டன் ரீல் விருது" = "இந்தியாவின் மகள்" என்ற ஆவணப்படத்திற்காக இவ்விருதைப் பெற்றவர்இரசூல் பூக்குட்டி
 
   20."தமிழக அரசின் நெசவாளர் விருது" = காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு என்பவர் பெற்றுள்ளார்
  
   21."ஆர்டர் ஆப் பிரெண்ட்ஷிப்"விருது = கூடங்குளம் வளாக இயக்குநர் ஆர்.எஸ் சுந்தர் அவர்கள் தேர்வு

22.பிரெஞ்சு திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு  திரைப்படத்திற்கான விருது இந்திய இயக்குனர் "கனுபெல் "இயக்கிய  "டிட்லி " திரைப்படத்திற்கு  வழங்கப்பட்டது

23.மிஸ் ஆசியா அழகி பட்டத்தை இந்தியாவின்  "ரேவதி சேத்ரி " வென்றார்

24.பசுமை பத்திர முன்னோடி (Green Bond award ) விருது  யெஸ் வங்கிக்கு வழங்கப்பட்டது

25.ஜெர்மனியின் "cross of the order of merit "விருது இந்திய வேதியியல் அறிஞரான கோவர்தன மேத்தாவிற்கு வழங்கப்பட்டது

26.ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் குழந்தைகள் பிரிவில் சிறந்த குறும்படமாக மலையாள திரைப்படம் ஓட்டல் (ottal ) திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது

27.இந்திய ஆடை வடிவமைப்பாளரான "மனீஸ்  அரோரா" அவர்களுக்கு பிரெஞ்ச் நாட்டின் செவாலியர் விருது வழங்கப்பட்டது

28.அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 2016 ஆம் ஆண்டிற்கான ரெமி விருது தமிழ்த்திரைபடமான "கனவு வாரியம் " படத்திற்கு வழங்கப்பட்டது

29.பீம்சன் ஜோசி விருது சாரங்கி வித்துவானான பண்டிட் ராம் நாராயணனுக்கு வழங்கப்படுகிறது

30.பிரெஞ்சு அரசின்  செவாலியர் விருது  இந்திய வம்சாவளியை சார்ந்த இஸ்மாயில் முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது

31.88 வது ஆஸ்கார் விருதுகள் :-சிறந்த திரைப்படம்=Spot light ,சிறந்த நடிகர்  = leonardo dicaprio(movie:The Revenant  )
சிறந்த நடிகை :=பிரியி லார்சன் (படம் :Room ) அதிகபட்சமாக 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் =மேட் மேக்ஸ்

32.பேரிடர் காலங்களில் இராணுவத்தின் சேவை மற்றும் உதவிகள் புரிந்ததற்காக புகழ்பெற்ற "இஸ்ரேல் விருது "டேவிட் சுல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டது

33.யுனெஸ்கோவின் பத்திரிக்கை சுதந்திர விருது  (Unesco or  guillermo cano world press freedom prize 2016) அசர்பெகிஸ்தான் நாட்டின் கடிஜா இஸ்மாயிலோவா அவர்களுக்கு வழங்கப்பட்டது

34.இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அவர்களுக்கு golden indian of the year 2016 விருது வழங்கப்பட்டது

35.தேசிய அறிவுசார் உடைமை விருது கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு வழங்கப்பட்டது

36.தேசிய சிறப்பு புவியியல்  அறிவியல் விருது வண்டல் தொழிநுட்பத்தில் சிறப்பாக செயலாற்றியதற்காக  அசோக்குமார் சிங்வி என்ற பேராசிரியர்க்கு  வழங்கப்பட்டது

37.நாடக பிரிவிற்கான 2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது மேனுவல் மிரண்டா என்பவர் எழுதிய "ஹாமில்டன் " என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது

38.ஜார்ஜ் க்ரியர்சன்  விருது (george grierson award) ஹிந்தி மொழி வளர்ச்சிக்கு உதவிய சீனா பேராசிரியர்  "ஜி புபிங்" என்பவருக்கு வழங்கப்பட்டது

39.சிறந்த கற்பனை படைப்பு பிரிவிற்கான     2016 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது வியட் தான் நிகுயென்  என்பவர் படைத்த "தி சிம்பதைசர்" என்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது

40.2015 ஆம் ஆண்டின் பிகாரி புரஸ்கார் விருது கவிஞர்  பகவதி லால் வியாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

41.2016 ஆம் ஆண்டிற்கான கிரேட் லண்ட்பெக்  ஐரோப்பிய மூளை ஆராய்ச்சி விருது (grete lundbeck european brain research prize இவ்விருதை மூளை விருது என்றும் அழைப்பர் ) இங்கிலாந்தை சார்ந்த timothy bliss,graham collingridg,richard morris ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது

42.47 வது தாதா சாகிப் பால்கே   விருது = இந்தி நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமார்

43.சுற்றுலா துறையின் ஆஸ்கார் எனப்படும் "தங்க நகர வாயில் விருது" புதிய உலகம் என்னும் சுற்றுலா குறும்படத்தை சிறப்பாக எடுத்ததற்காக
கேரளா சுற்றுலா துறைக்கு அவ்விருது வழங்கப்பட்டது

44.கணித நோபல் பரிசு என போற்றபடும் 2016 ஆம் ஆண்டிற்கான ஏபெல் விருதை  இங்கிலாந்து நாட்டின் andrew wiles அவர்களுக்கு வழங்கப்பட்டது

45.ஒட்டு மொத்த அளவில் அதிக உற்பத்தி திறனுக்கான பரிசை "மத்திய பிரதேசம் விருது வென்றது .குறிப்பிட்ட பயரில் சிறப்பான உற்பத்தி பிரிவில் தமிழகம் தானியம் பிரிவில் பரிசை வென்றது

46.புதுமை விருது 2016 (innovation award 2016) =டாக்டர் ஸ்ரீசென்டு டி
47.2016 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுபெற்ற நூல் = Family Life - அகில் சர்மா

48.பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கை சார்ந்த பெண் மனித உரிமை போராளியான  "தபசும் அத்னான் " அவர்களுக்கு "நெல்சன் மண்டேலா -கிரகா மச்சேல் புதுமை விருது (nelson mandela graca machel innovation award) வழங்கப்பட்டது

49.2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த பண வங்கி விருது (banknote of the year award 2015) நியூசிலாந்து நாட்டின் 5 டாலர் மதிப்புடைய பணத்திற்கு வழங்கப்பட்டது

50.சர்வதேச தாவர ஊட்டச்சத்து அறிஞர் விருதை(international plant nutrition scholar award) பெற்ற இந்தியர் = அசோக் குமார், கரக்பூர் இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்

51.பிரான்சு நாட்டின் உயரிய விருதான order of arts and letters honours of france எனும் விருது காந்திஜி யின் பேத்தியான தாரா காந்தி பட்டாசார்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது

52.2016 ஆம் ஆண்டிற்கான ஹிருதயாத் மங்கேஷ்கர் விருது விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது

53.2015 ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருது ,எழுத்தாளரும் பெண் கவிஞருமான  "பத்மா சச்தேவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது ."சித்-சேதே " என்ற வாழ்க்கை வரலாற்று நாவலுக்காக வழங்கப்பட்டது

54.fbb femina miss india 2016 = டெல்லியை சார்ந்த பிரியதர்ஷினி சட்டர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

55.ஜப்பான் நாட்டின் உயரிய விருதான order of rising sun gold and silver விருது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரான  நந்த கிஷோர் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது

56.இந்தியாவில் சிறந்த கிராம பஞ்சாயத்து விருது தெலுங்கான மாநிலத்தின் கரிம்நகர் மாவட்ட பாலுமல்லுபள்ளி பஞ்சாயத்து பெற்றது

57.மாஸ்டர் தினாநாத் மங்கேஷ் கர்  வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல ஹிந்தி நடிகர் ஜிதேந்த்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டது


No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018