Monday 10 October 2016

நெம்புகோல்


நெம்புகோல்
 


ஆக்கிமிடீஸ் என்பவரே நெம்புகோல் கொள்கையை முதலில் விளக்கியவர். இவர் பின்வருமாறு கூறினார்:

சமமான தூரத்தில் இருக்கும் சமமான எடைகள் சமநிலையில் இருக்கும். சமனான எடைகள் சமனற்ற தூரத்தில் இருக்கும்போதுசமநிலையில் இராமல் தொலைவில் இருக்கும் எடையின் பக்கம் சரியும்.

நெம்புகோலின் பயனை விளக்குவதற்காக, நிற்பதற்கு ஒரு இடம் இருந்தால், நெம்புகோலைப் பயன்படுத்திப் புவியையே நகர்த்திக்காட்டுவேன் என்று ஆக்கிமிடீஸ் கூறினாராம்.


நெம்புகோல் ஓரிடத்தைப் பற்றிச் சுழலக்கூடியதாக அமைந்திருக்கும். இவ்விடம் சுழலிடம் எனப்படும். எப்பொருளின்மீது விசைபயன்படுத்தப்பட உள்ளதோ அப்பொருள் சுமை எனவும் அதன் மீது பயன்படுத்தப்படும் விசை முயற்சி எனவும் அழைக்கப்படும்.சுமைக்கும் சுழலிடத்துக்கும் இடையில் உள்ள தூரம் சுமைப் புயம் எனவும், முயற்சிக்கும் சுழலிடத்துக்கும் இடையிலுள்ள தூரம்முயற்சிப் புயம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையிலான தொடர்பு பின்வருமாறு சமன்பாடாகக் குறிக்கப்படலாம்.

சுமை x சுமைப் புயம் = முயற்சி x முயற்சிப் புயம்

நெம்புகோல் வகைகள்
நெம்புகோல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கமுடியும். இவை, முதல்வகை நெம்புகோல், இரண்டாம் வகை நெம்புகோல், மூன்றாம்வகை நெம்புகோல் என அழைக்கப்படுகின்றன.
  
முதல் வகை நெம்புகோல்
இவ்வகை நெம்புகோல்களில் சுழலிடம், சுமைக்கும், முயற்சிக்கும் இடையில் அமைந்திருக்கும். இதில் முயற்சி விசை தள்ளுவதன்மூலம் அல்லது இழுப்பதன் மூலம் கொடுக்கப்படும். இவ்வகை நெம்புகோல்கள் சிலவற்றில் சுழலிடம், சுமைக்கும், முயற்சிக்கும்இடையில் சமதூரத்தில் நெம்புகோலின் மையப் பகுதியில் அமைந்திருக்கக் காணலாம். ஆனால், இது சுமைக்கும் முயற்சிக்கும்இடையில் எப்புள்ளியிலும் அமையலாம்.

எடுத்துக்காட்டுகள்:

மேல்கை முத்தலைத் தசை
மிதிவண்டி நிறுத்துபொறி
கடப்பாரை
கவர்ச் சுத்தியல் (ஆணி பிடுங்கும் போது)
குறடு
கத்திரிக்கோல்
காலணி மாட்டி
நெம்புத் தண்டு
சில்லும் அச்சும்

இரண்டாம் வகை நெம்புகோல்
இவ்வகையில் சுழலிடம் ஒரு முனையிலும், முயற்சி மறு முனையிலும் இருக்க, சுமை இவ்விரண்டுக்கும் இடையில் இருக்கும்.


எடுத்துக்காட்டுகள்:

கதவு
துடுப்பு
பாக்குவெட்டி
ஒற்றைச்சில் கைவண்டி (Wheelbarrow)
திருகாணிச்சாவி (Wrench)
பாய்பலகை (Springboard)

மூன்றாம் வகை நெம்புகோல்.
மூன்றாம் வகையில் சுழலிடம் ஒரு முனையிலும் சுமை மறு முனையிலும் இருக்க முயற்சி அவற்றுக்கு இடையில் இருக்கும்.இவ்வகையில் சுமையிலும் முயற்சி விசை அதிகமாக இருக்கும். எனவே குறைந்த விசையுடன் கூடிய சுமையை நகர்த்தும் நோக்கில்இது பயன்படுத்தப்படுவதில்லை மாறாக, முயற்சி விசையை வசதியான இடமொன்றில் கொடுக்கும் நோக்கத்துக்காகவேபயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இதன் மூலம் முயற்சி விசையிலும் கூடிய வேகத்துடன் சுமையை நகர்த்த முடியும்.


எடுத்துக்காட்டுகள்:

மேல்கை இருதலைத் தசை
கூட்டுமாறு (Broom)
தூண்டில் தண்டு
ஹாக்கி மட்டை
சாவணம்
இடுக்கி
நகம்வெட்டி

எலிப்பொறி

No comments:

Post a Comment

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018