கண்டனத் தீர்மானம் - Censure Motion
* கண்டனத்
தீர்மானம் (Censure Motion) என்பது
எதிர்க்கட்சிகளால் லோக்சபையில் கொண்டுவரப்படும் தீரமானம் ஆகும். கண்டனத் தீர்மானம்
லோக்சபையில் நிறைவேற்றப்பட்டால், Council of
Ministers மிக விரைவில் லோக்சபையின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்.
* ஒரு பண மசோதா அல்லது குடியரசுத் தலைவரின் உரை மீதான நன்றி நவிலல் தீர்மானம் (Money Bill or the Vote of Thanks to the President) ஆகியவை லோக்சபையில் தோற்கடிக்கப்பட்டால், அப்போதும் லோக்சபையின் நம்பிக்கையை பெற்றுள்ளதை நிரூபிக்க வேண்டும்.
* கண்டனத் தீர்மானம் என்பது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து (No-Confidence Motion) முற்றிலும் மாறுபட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது அதற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்பட வேண்டியதில்லை.
* ஆனால் கண்டனத்தீர்மானத்தின்போது காரணம் அல்லது குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட வேண்டும். அரசின் கொள்கை, திட்டம் அல்லது இதர விஷயங்களுக்காக ஒரு தனி அமைச்சர் அல்லது அமைச்சர் குழு, அல்லது ஒட்டுமொத்த அமைச்சரவை மீதோ கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படலாம்.
* நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இராஜ்யசபையில் கொண்டு வர இயலாது. ஆனால் கண்டத் தீர்மானத்தை இராஜ்யசபையிலும் புகுத்த இயலும்.
* நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்த அரசும் கலைந்துவிடும். ஆனால் கண்டனத் தார்மானம் நிறைவேற்றப்பட்டால், கண்டனத்துக்குரிய அமைச்சர் அல்லது நபர்கள் மட்டும் பதவி இழக்க நேரிடும்.
* நம்பிக்கையில்லாத் தீரிமானத்தைக் கொண்டு வர சபாநாயகரின் அனுமதி அவசியம் தேவை. ஆனால் அத்தகைய அனுமதி ஏதும் கண்டனத் தீர்மானத்திற்கு தேவையில்லை.
No comments:
Post a Comment