நெருக்கடி நிலைப்
பிரகடனம்
THE
EMERGENCY
* Art.352-ன்படி இந்தியாவின் எல்லைக்கு, போர் அல்லது வெளிநாட்டுப் படையெடுப்பின் மூலமோ, அல்லது இந்தியாவின் அமைதிக்கு ஆயுதமேந்திய உள்நாட்டுக் கலவரத்தின் மூலமோ பாதிப்பு ஏற்பட்டால், நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
* மாநில அரசுகள் அரசியமைப்புக்கு முரணாகச் செயல்படுகின்றன என்றால் நெருக்கடி நிலை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் (Art.356)
* நிதி நிலையில் (Art.360) நெருக்கடி ஏற்பட்டாலும் இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
* "நெருக்கடி நிலைப் பிரகடனம்" Proclamation of emergency என்னும் சொல் Art.352-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய நெருக்கடி நிலையையே (National Emergency) குறிப்பிடுகிறது.
* Art.356-ன் கீழ் பிரகடனப்படுத்தப்படும் மாநில நெருக்கடி நிலையை குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) என்று குறிப்பிடுவர்.
தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் - National Emergency
* Art.352-ன்படி போர் அல்லது
அந்நியப் படையெடுப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியின் காரணமாக இந்தியா முழுவதற்குமோ,அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதிக்கோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேர்ந்துள்ள நிலை
உருவாகியுள்ளது என்ற கேபினட் தீர்மானம் பற்றி குடியரசுத் தலைவருக்கு எழுத்து மூலம்
தகவல் கிடைத்து, அதில் குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்தால்,இந்தியா முழுவதற்குமோ, அல்லது அதன் ஒரு
சில பகுதிகளுக்கு மட்டுமோ ஒர் அவசர நிலையை அவர் பிரகடனப்படுத்தலாம். அவசர நிலைப் பிரகடனங்கள்
பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
* பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் பிரகடனங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அப்பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் முதல் ஒரு மாதம் முடிவந்தவுடன் அவை செயலிழந்துவிடும்.
* பாராளுமன்றத்தால்
ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் இன்னொரு பிரகடனத்தால் குடியரசுத் தலைவர் அதனை ரத்து செய்யாதவரை
அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மட்டுமே அவசர நிலைப்பிரகடனம் அமலில் இருக்கும்.
* பின்னர் மீண்டும்
பாராளுமன்றம் ஏற்றால் அடுத்து 6 மாத காலத்திற்கு
நீடிக்கும்.
* இவ்வாறாக 3 ஆண்டுகளுக்குத் தான் இவ்வறிவிப்பை நீட்டிக்க இயலும். அவசரநிலைப் பிரகடனத்திற்கு
ஒப்புதல் அளிக்கிற தீர்மானங்கள், அல்லது நீட்டிக்க
வகை செய்யும் தீர்மானங்கள், பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆஜராகி வாக்களித்துப் பெரும்பான்மை
ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும்.
* அவசர நிலை தொடர்பான
ஒரு தீர்மானம் பற்றிய அறிவிப்பை அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்குக்குக்
குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடமோ சமர்ப்பித்தால் அத்தீர்மானம்
பற்றிப் பரிசீலிக்க, 14நாட்களுக்குள் அவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
* தாம் பிறப்பித்த
நெருக்கடிப் பிரகடனத்தை, குடியரசுத் தலைவரே
வாபஸ் பெறலாம். ஆனால் ஒன்றிய அமைச்சரவையின் எழுத்து வடிவிலான அனுமதியைப் பெற்ற பிறகே, குடியரசுத் தலைவர் இந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவிக்க இயலும்.
* இந்த நெருக்கடி
நிலைப்பிரகடனத்தைப் பொறுத்த வரை குடியரசுத் தலைவரின் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கான
காரணம்,நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது.எனவேகுடியரசுத் தலைவர்
இது குறித்த காரணங்களில் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டவராவார்.
* Art.352-ல் உள்ள அவசர நிலைப்
பிரகடனம் பற்றிய வகையுரைகள், 1979-ல் அமுலுக்கு வந்த 44-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978-ன்படி மேலும் கடுமையாக்கப்பட்டன. அவை:
* உள்நாட்டு நெருக்கடி Internal disturbances காரணத்தின்பேரில் ஜூன் 25-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தால் ஏற்பட்ட மிக மோசமான அனுபவங்களை
அடுத்து,
* உள்நாட்டு நெருக்கடி
என்ற தெளிவற்ற சொற்களுக்குப் பதிலாக, ஆயுதக்கிளர்ச்சி
-armed rebellion என்ற சொற்கள் இணைக்கப்பட்டன.
* பிரதமரின் வாய்மொழி
ஒப்புதல் அல்லது அனுமதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் முறையை கைவிடப்பட்டு, 44-வது திருத்தத்தின் மூலம் கேபினட்டின் தீர்மானம் எழுத்து மூலமாக குடியரசுத் தலைவருக்கு
சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, அவர் நெருக்கடி
நிலையை அறிவிக்க முடியும் என்பது நிபந்தனையாக்கப்பட்டது.
* அவசரநிலைப் பிரகடனம்
செய்யப்பட்ட 2 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் அனுமதியைப் பெற
வேண்டும் என்றிருந்த கால வரம்பு, 44-வது சட்ட திருத்தத்தின்
மூலம் 1 மாதமாகக் குறைக்கப்பட்டது.
* 44-வது திருத்தத்திற்கு முன்னர், அவசர நிலைப்பிரகடனம், பாராளுமன்றத்தில்
ஒருமுறை ஒப்புதல் பெற்ற பிறகு, கால வரையின்றி
அவசர நெருக்கடி நிலை நடைமுறையில் இருக்க வாய்ப்பு இருந்தது.
* ஆனால் 44-வது திருத்தம் அதை நீக்கி, அவசர நிலையை 6 மாதம் வரை மட்டுமே நீட்டிக்க வழி செய்தது.
* 44-வது திருத்தத்திற்கு முன்பு
வரை, அவசரநிலை அறிவிக்கப்பட்டு விட்டால், அதை முடிவுக்குக் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு குறிப்பிட்ட வரையறைகள் இல்லாமல்
இருந்தது.
* ஆனால் இத்திருத்தத்திற்குப்
பிறகு லஸோக் சபையின் உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கையின்
அடிப்படையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு, அவசரநிலையை நிராகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
* 44-வது திருத்தத்திற்கு முன்னர், போர், அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உள்நாட்டுத் தொந்தரவுகள் போன்ற எக்காரணத்திற்காக
(Art.352)அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டாலும்,
* Art.19 தாமாகவே செயலிழந்து
விடும் என்று Art.358 வலியுறுத்தியது.
* ஆனால் 44-வது திருத்தம், போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களுக்காக
அவசரநிலை அறிவிக்கப்பட்டால் மட்டுமே Art.19 தாமாகவே செயலிழக்கும் (Art.358) என்று வரையறுத்தது.
* மேலும் 44-வது திருத்த்திற்கு முன்னர், அடிப்படை உரிமைகளில்
எது வேண்டுமானாலும், நிறுத்தி வைக்கப்பட இயலும் என்ற நிலை இருந்தது.
* ஆனால் 44-வது திருத்தத்தின் மூலம், அவசர நிலைப் பிரகடனத்தின்போதும் Art.20 மற்றும் 21 ஆகிய இரு
ஷரத்துக்களையும் நிறுத்திவைக்க இயலாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் விளைவுகள்
* ஷரத்து 352-ன்படி செய்யப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது 1. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் சம்மந்தமாகவும் பாராளுமன்றம் சட்டமியற்றலாம்.
2. மத்திய அரசு மற்றும்
மாநில அரசின் ஆட்சிக்குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை விதிக்கலாம்.
3. மத்திய மாநில அரசுகளுக்கிடையே
வருமானப் பங்கீடு குறித்து மாறுதல் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
4. பொதுமக்கள் தங்களின்
அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு வழக்குத்தொடர இயலாது. இதுகுறித்து வழக்குகள்
நீதிமன்றத்தில் இருந்தாலும், அவ்வழக்குகள் தற்காலிகமாக
நிறுத்தி வைக்கப்படும்.
5. குடியரசுத் தலைவர், மாநிலங்களுக்கு எதுபற்றி வேண்டுமானாலும் தமது கட்டளைகளைப் பிறப்பிக்கலாம்.
6. மேலும் இந்நெருக்கடி
நிலைப்பிரகடனப்படுள்ளபோது, மக்களவையின் (லோக்சபை)
பதவிக்காலத்தை நாட்டிப்பதற்கும்,பாராளுமன்றத்திற்கு
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இக்கால நீட்டிப்பு, நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 6 மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். அவ்வாறே மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும்
நீட்டிக்கப்படலாம்.
இது தவிர மக்களின் அடிப்படை உரிமைகலில் Art 20 மற்றும் 21 ஆகியவற்றைத்
தவிர பிற உரிமைகளின் செயல்பாடுகளை நெருக்கடி நிலையின்போது குடியரசுத் தலைவர் நிறுத்தி
வைக்க அதிகாரம் பெற்றுள்ளார்.
மாநில நெருக்கடி நிலைப் பிரகடனம் - State Emergency
* Art. 356-
* Art. 356-ன்படி ஒரு மாநிலத்தின்
அரசாங்கத்தை அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளப்படி நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
என்றோ, அரசியலமைப்பு இயந்திரம் அங்கே செயலிழந்துவிட்டது என்றோ, அம்மாநில ஆளுநர் அளித்த அறிக்கையின்படி, அல்லது வேறு விதமாகக் குடியரசுத் தலைவருக்குத் திருப்தி ஏற்பட்டால், அம்மாநில ஆளுநர் மற்றும் பிர அதிகார அமைப்புகள் உள்ளிட்ட மாநில அரசாங்க அதிகாரங்கள்
அனைத்தையும் குடியரசுத் தலைவரே, தம்வசம் எடுத்துக்கொள்வதாகப்
பிரகடனம் ஒன்றை வெளியிடலாம்.
* குடியரசுத் தலைவரின்
திருப்தி என்பது ஒன்றிய அரசாங்கத்தின் திருப்தியையே குறிக்கும் அத்துடன், குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் அது ஒன்றிய அரசாங்கத்தின் ஆட்சியே ஆகும்.
* குடியரசுத் தலைவர்
ஆட்சியின்போது மாநில சட்டப்பேரவையின் அதிகாரங்களை பாராளுமன்றமே செயல்படுத்தும்.
* மாநில சட்டப்பேரவை
கலைக்கப்படலாம், அல்லது அதின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படலாம்.
* மாநில உயர்நீதிமன்றத்தினைத்
தவிர, எந்த ஒர் அதிகார அமைப்புடனும் சம்மந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகளின்
செயல்பாட்டை நிறுத்தி வைப்பது உட்பட, தேவையான பிற நடவடிக்கைகளையும்
குடியரசுத் தலைவர் மேற்கொள்லலாம்.
* குடியரசுத் தலைவர்
ஆட்சியின் பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல்
அளிக்காவிட்டால்,
2 மாதங்களின் முடிவில்
பிரகடனம் முடிவுக்கு வந்துவிடும். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் ஒரே சமயத்தில் 6 மாதங்களுக்கு மேலும், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேலும் ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை நீட்டிக்க இயலாது.
* எனினும் 68-வது திருத்தத்தின்படி பஞ்சாப் மாநிலத்தில் 1987-ல் பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து 5ஆண்டுகளுக்கு நீட்டிக்க வழி செய்யப்பட்டது.
நிதி நெருக்கடி நிலைப் பிரகடனம் - Financial Emergency
* இந்தியா முழுவதிலுமோ, ஏதேனும் ஒரு பகுதில் மட்டுமே நிதி நிலை சீர்கெட்டுப்போகும் அபாயம் உள்ளது என்று
குடியரசுத் தலைவருக்கு திருப்தி ஏற்பட்டால், நிதிநிலை நெருக்கடியை அவர் பிரகடனப்படுத்தலாம் என்று Art.360 குடியரசுத்தைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.
* இந்தப் பிரகடனம்
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாவிட்டால், 2 மாத முடிவில் தாமாகவே செயலிழந்துவிடும்.
* ஆனால் ஒரு முறை
பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், இரத்து செய்யப்படும் வரை அல்லது மாற்றியமைப்படும் வரை நிதிநிலை நெருக்கடி நடைமுறையில்
இருக்கும்.
* நிதிநிலை நெருக்கடி
நடைமுறையில் உள்ளபோது, மாநில அரசுகள்
சில குறிப்பிட்ட நிதிநிலைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என ஒன்றியம் உதிதரவிடலாம்.
* மேலும் மாநில அரசின்
கீழ் பணியாற்றுவோரின் ஊதியத்தையும் படிகளையும் குறைப்பது, மாநில சட்டப்பேரவைகள் இயற்றிய பண மசோதக்கள் உள்ளிட்ட மற்ற மசோதாக்களை குடியரசுத்
தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி வைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.
* மேலும் ஒன்றியத்தின்
கீழ் பணிபுரியும் அனைவருடைய ஊதியங்களையும், படிகளையும் (உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள்
உள்பட) குறைக்கவேண்டுமென்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.
* நமது அரசியலமைப்பு
நடைமுறைக்கு வந்தது முதல் இது வரை ஒருமுறை கூட நிதிநெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதில்லை.
No comments:
Post a Comment