Monday, 10 October 2016

விருதுகளும் துறைகளும்



விருதுகளும் துறைகளும்


பாரத ரத்னா விருது:

கலை,இலக்கியம்,அறிவியல்,பொதுச் சேவை    இந்தியாவின் மிக உயரிய விருது.

இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

முதல் விருது பெற்றவர்கள் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்,சர் சி.வி.ராமன் மற்றும் சி.ராஜகோபாலாச்சாரி.


பத்ம விபூஷன் விருது    
எந்த ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.            
இந்தியாவின் மிக உயரிய இரண்டாவது விருது. இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பத்ம பூஷன் விருது:

எந்த ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.            
இந்தியாவின் மிக உயரிய மூன்றாவது  விருது. இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பத்மஸ்ரீ விருது: 

எந்த ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.   

பரம்வீர் சக்ரா விருது:    

வீரத்தையும் மற்றும் தன்னலமற்ற தியாகத்தையும் எடுத்துரைக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.                   
1947 நவம்பர் 3 ல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 26 ஜனவரி 1950 விரிவுபடுத்தப்பட்டது. படைத்துறையினருக்கு வழங்கப்படும் முதல்உயரிய விருது

மகா வீர் சக்ரா விருது:  

போர் புரிந்து இறந்த (தரை வழி,ஆகாய மார்க்கம்) இந்தியப் படை வீரர்களுக்கு இறந்த பிறகு இவ்விருது வழங்கப்படுகிறது.          
படைத்துறையினருக்கு வழங்கப்படும் இரண்டாவது  உயரிய விருது

வீர் சக்ரா விருது:                  

இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால்வழங்கப்படுகிறது.                   படைத்துறையினருக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருது

அசோக் சக்ரா விருது:     

இந்திய படை வீரர்களின் வீர தீர செயல் மற்றும் தன்னலமற்ற தியாகத்திற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.                      
இவ்விருது 1952 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கீர்த்தி சக்ரா விருது:   
     
இந்திய படை வீரர்களின் வீர தீர செயல் மற்றும் தன்னலமற்ற தியாகத்திற்காக இவ்விருது வழங்கப்படுகிறது  

இந்திரா காந்தி அமைதி விருது:      
                
பன்னாட்டு அமைதி , வளர்ச்சி, பொருளாதார அமைப்பு, மக்களுக்கு பெரிதும் பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக இந்தியஅரசால்வழங்கப்படுகிறது.                     இவ்விருது தனி நபர் மற்றும் நிறுவனக்களுக்கும் வழங்கலாம்.ராஜீவ் காந்தி,எம்.எஸ்.சுவாமிநாதன்(பசுமைப் புரட்சியின் தந்தை),இலா பட்(SEWA – Self-Employed Women’s Association of India- இந்திய சுய தொழில்பெண்கள் சங்கம் உருவாக்கினார்) ஆகியோர் இந்த விருதைப்பெற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது:   
            
இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.      
       

இது1991,1992 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெற்ற முதல் சாதனையாளர் விஸ்வனாதன் ஆனந்த். இவர்சதுரங்கப்போட்டிக்காக இவ்விருது பெற்றார்.பரிசுத்தொகை ரூ7,50,000/-(ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்)

துர்னோச்சார்யா விருது:

இவ்விருது சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு வழங்கப்படுகிறது.           
இவ்விருதுக்கான பரிசுத்தொகை ரூ5,00,000(ஐந்து லட்சம்).முதன் முதலில் இவ்விருது ஓ.எம்.நம்பியார் என்பவருக்கு தடகள போட்டிபயிற்றுதலுக்காக வழங்கப்பட்டது. முதன் முதலில் இவ்விருது பெற்ற இந்தியரல்லாதவர் பெர்னாண்டஸ்(B.I. Fernadez) 2012ல் பெற்றார்என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுனா விருது:        
          
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.விளையாட்டுத் துறைக்கென வழங்கப்படும்இரண்டாம் உயரிய விருதாகும்.          இது 1961 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.இதற்கான பரிசுத்தொகை ரூ5,00,000/-(ஐந்து லட்சம்)

தாதாசாகிப் பால்கே விருது:    
    
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தோர்க்கு இவ்விருது வழங்கப்படுகிறது.          
முதன் முதலில் 1969ல் வழங்கப்பட்டது.1லட்சம் பணம் ரொக்கப்பரிசாக இந்திய அரசால் வழங்கி கவ்ரப்படுத்தப்படுகிறது.இவ்விருதுபெற்றமுதல் சாதனையாளர் தேவிகா ராணி

தேசிய திரைப்பட விருது(National Film Awards):     
        
திரைப்படத்தில் சிறந்து பங்காற்றிய கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.                      
இது அக்டோபர்,1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருது குடியரசுத் தலைவரால் புது டெல்லியில் ஆண்டுதோறும்வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவின் ஆஸ்கார் விருதாக பெரிது மதிக்கப்படுகிறது.

ஞான பீட விருது:        
           
இது இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது              
இவ்விருது 1961ல் நிறுவப்பட்டு 1965முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருது பெற்றவர் ஜி.சங்கர குருப் (ஒடக்குழல்).தமிழ்நாட்டில் 1975 அகிலன் (நூல் சித்திரப்பாவை),2002 ல் ஜெயகாந்தன்  ஆகியோர் இவ்விருது பெற்றார்கள்.

சாதித்ய அகடமி விருது:

இதுவும் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருதாகும்.
இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.பரிசுத் தொகை ரூ1,00,000(ஒரு லட்சம்).முதன் முதலில் தமிழ் இலக்கியத்திற்கெனஇவ்விருது பெற்றவர் ரா.பி.சேதுபிள்ளை(தமிழ் இன்பம் என்ற கட்டுரைக்காக 1955ல்)

தயாந்த் சந்த் விருது:     
   
இவ்விருது விளையாட்டுத்துறையில்  உள்ள வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.      
இவ்விருது 2002 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தயான் சந்த் மிகச் சிறந்த ஹொக்கி வீரர் இந்தியா 1928,1932,1936 ஒலிம்பிக்போட்டிகளில் அதிக கோல் அடித்தவர், இவர் பிறந்த தினமே இந்தியாவின் விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

சரஸ்வதி சம்மான் விருது:      
        
இவ்விருது இந்திய மொழிகளில் எழுதப்பட்ட உரைநடை அல்லது கவிதைக்கு வழங்கப்படுகிறது.         
இவ்விருது 1991 முதல் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத் தொகை ரூ10,00,000(10 லட்சம்). தமிழில் மணவாளன் என்பவர் இவ்விருதை 2011ல் பெற்றார்.      

சி.கே.நாய்டு வாழ்நாள் சாதனையாளர் விருது"     
                   
இவ்விருது கிரிக்கெட் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு வழங்கப்படுகிறது. 

சர்வதேச விருதுகள்

நோபல் பரிசு:

வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒருபரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசுஅறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்கபங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பரிசு.
பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில்பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விருது:    
          
சர்வதேச திரைப்படங்களுக்கு தரும் விருதாகும்     
இது ஃப்ரான்ஸ் நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும். 1946 லிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது.

ஆஸ்கார் விருது:           
       
திரைப்படத்துறயில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.             
முதன் முதல் இவ்விருது பெற்ற இந்தியர்பானு ஆத்தையா (Bhanu Athaiya).இவர் காந்தி (1982) என்ற திரைப்படத்திற்கான சிறந்த ஆடைவடிமைப்பாளருக்கான விருது பெற்றார்.தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இசையமைப்பாளர் இரண்டு விருதுகள் ஸ்லம்டாக் மில்லினரி )Slumdog Millionaire (2008)) என்ற படத்திற்காகப் பெற்றார்.

கோல்டன் குளோப் விருது:

இவ்விருது சிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது.                 
இவ்விருது 1944 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

புக்கர் பரிசு (Booker Prize) அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு (Man Booker Prize for Fiction):

ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும்.1997 - இந்திய எழுத்தாளரான அருந்ததி ராய். 2006 - இந்தியாவில் பிறந்த கிரண் தேசாய் , 2008 – அரவிந்த் அடிகா

புளிட்சர் விருது(Pulitzer Prize):

இவ்விருது இலக்கியம் , நாடகம், இசை மற்றும் பத்திரிக்கைக்காக வழங்கப்படுகிறது                    
இவ்விருது அமெரிக்க பத்திரிக்கை வெளியீட்டாளர் நினைவு கூறும் வகையில் 1916ல் நிறுவப்பட்டு 1917முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ராமன் மகசேசே விருது(Ramon Magsaysay Award) அல்லது ஆசியாவின் நோபல் பரிசு:

இவ்விருது அரசு சேவை, மக்கள் சேவை , இலக்கியம் அமைதி போன்ற துறைகளுக்கு வழங்கப்படுகிறது.          

இவ்விருது பிலிப்பைஸ் நாட்டு அதிபர் ராமன் மகசசே நினைவாக ராமன் மகசசே நிறுவனம் மூலம்  1958 முதல் வழங்கப்படுகிறது.

1 comment:

CURRENT AFFAIRS ENGLISH - JULY 08,2018